படிவம் 4 வரலாறு

இயங்கலையில் படிவம் 4 வரலாறு. இடைநிலைப்பள்ளிக்கான வரலாற்றுப் பாடத்தை மாணவர்களுக்குத் தமிழிலேயே விளக்குகிறார் ஆசிரியர் திரு.சிவக்குமார் இராமச்சந்திரன்.

Bab 1: Kemunculan Tamadun Awal Manusia – Tingkatan 4 (Sejarah)

திருக்குறள் படிவம் 1

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்                 

பொருள்: பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

பொருள்: ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்         

பொருள்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்.

சிறுகதை – அவமானம்

அவமானம்

இன்று எல்லோரும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள். மாணவர்கள் சிரிக்கிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், ஆறுதலும் தேறுதலும் சொல்ல வேண்டிய ஆசிரியர்களும் அல்லவா என்னைப் பார்த்து நையாண்டிப் பேச்சால் அவமானப்படுத்துகிறார்கள். நான் செய்தது தப்புத்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. அதனால்தான் ஆசிரியர் கேட்டவுடனேயே உண்மையை ஒப்புக் கொண்டேன். உண்மையை ஒப்புக்கொண்ட அந்த நேரத்தில் வகுப்பில் எழுந்த சிரிப்பலை இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மாணவர்களும் என்னைப் பார்க்கின்ற பார்வை இருக்கிறதே, ஐயோ என்னால் அதை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இடைநிலைப்பள்ளியில் கால்பதித்து ஒரு மாதம் கடந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழலில் நான் இருப்பதாகவே உணர்ந்தேன். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் நான் புகுமுக வகுப்பில் விடப்பட்டிருந்தேன். என்னோடு படித்த சிவாவும் சங்கரியும் அதே வகுப்பில் இருந்தார்கள். தேவாவும் அரசியும் அதே பள்ளியில் படிவம் ஒன்றனில் இருந்தனர். பாழாய்ப் போன மலாய் சிவா, சங்கரியோடு என்னையும் சேர்த்துப் பழிவாங்கிப் புகுமுக வகுப்புக்குக் கொண்டுவந்து போட்டது. மலாய்க் கட்டுரையில் ‘ஈ’ எடுத்த காரணத்தினால் நானும் மலாய்க் கருத்துணர்தலில் ‘ஈ’ எடுத்த காரணத்தினால் சிவாவும் சங்கரியும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம். 18 மாணவர்கள் இருந்த அந்த வகுப்பில் மற்ற அனைவரும் சீன மாணவர்கள்.

எங்கள் மூவரைக் கண்டால் சீன மாணவர்களுக்கு ஒரே எலக்காரம்தான். வகுப்பறையைச் சுத்தம் செய்யும் வேளை பெரும்பாலும் எங்களுடையதுதான். அதிகபட்சம் அவர்கள் வெண்பலகையைச் சுத்தம் செய்வார்கள். நல்ல மூட்டில் இருந்தால் மேசைகளை அடுக்கி வைப்பார்கள். கூட்டுவதும் பெருக்குவதும் பின் அவற்றைக் கொட்டுவதும் நாங்கள் மூவர்தாம் செய்ய வேண்டும். இது எழுதப்படாத சட்டம். டூட்டி ரோஸ்தரில் மட்டும் எல்லாப் பெயரும் எல்லா வேலைகளையும் செய்வதுபோல் தயாரிக்கப்பட்டிருக்கும். ஆசிரியரிடம் சொல்லும் அளவுக்கு எங்களுக்குத் துணிச்சலும் இல்லை; மொழியாற்றலும் இல்லை. ‘இண்டியா ஈத்தாம்’ என்பது எங்கள் மூவருக்குமான ஒற்றை அடைமொழி. பலவேளைகளில் ‘இந்துகுய்’ என்றும் அவ்வப்போது ‘இந்துரென்’ என்றும் காதில் விழும். அதன் பொருள் புரிந்து கொள்வதற்குள் ஒரு மாதக்காலம் கடந்துவிட்டது.

எனக்கு அம்மா மட்டும்தான். அப்பா விபத்தில் இறந்தபோது எனக்கு ஐந்து வயது என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்குத் தம்பி ஒருவனும் தங்கை ஒருத்தியும் இருக்கின்றனர். இருவரும் நான் படித்த அதே தமிழ்ப்பள்ளியில்தான் படிக்கிறார்கள். காலையில் தோட்டப்புறத்தில் வெளிக்காட்டு வேலையும் இரவில் உணவுக்கடையிலும் அம்மா வேலை பார்த்து எங்கள் மூவரையும் படிக்க வைக்கிறார். தமிழ்ப்பள்ளியில் இருக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரொம்பவும் மகிழ்ச்சியாகவே என் வாழ்க்கை கழிந்தது. அம்மா பள்ளிக்கு அனுப்புவதிலோ உணவுக்கோ எந்தச் சிரமத்தையும் எதிர்நோக்கியதில்லை.
தமிழ்ப்பள்ளியில் போக்குவரத்துக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். வீட்டிற்கு வேன் வரும். எங்களை ஏற்றிக்கொண்டு பள்ளியில் விடுவார்கள். பள்ளி முடிந்ததும் மீண்டும் ஏற்றிவந்து வீட்டில் விட்டுவிடுவார்கள். எங்கள் பள்ளியில் சிற்றுண்டிச் சாலை இருக்கிறது. ஆனால் நடத்துநர் இல்லை. ஆசிரியரிடம் கேட்டுப் பின்னர் தெரிந்து கொண்டேன். எங்கள் பள்ளி குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பள்ளியாம். ஆதலால் சிற்றுண்டிச் சாலை நடத்துவதற்கு வழியில்லையாம்.

ஆசிரியர்களே வெளியிலிருந்துதான் உணவு வாங்கி வருவார்கள். எங்கள் பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆர்எம்தி உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் பள்ளி ஆசிரியர்கள். ஓய்வு வேளையில்போது எங்கள் அனைவருக்கும் உணவு இருக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவு இருக்கும். செவ்வாயும் வெள்ளியும் மட்டும் சைவமாகக் கொடுப்பார்கள்.

உணவுக்காகவே பல நாள்கள் நான் பள்ளிக்கு மட்டம் போடாமல் வந்திருக்கின்றேன். வீட்டில் அப்படிப்பட்ட உணவெல்லாம் சத்தியமாகக் கிடைக்க வாய்ப்பே இல்லை. இதனால் பலநாள் அம்மாவோடு சண்டை போட்டுப் பேசாமல் இருந்திருக்கிறேன். அம்மாவை அழவும் வைத்திருக்கிறேன்.

ஆறாம் ஆண்டு வந்தபோது மாலை வகுப்புத் தொடங்கி இருந்தார்கள். நாங்கள் ஐந்து பேர்தான் என்பதால் மதிய உணவுக்கும் ஏற்பாடாகி இருந்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. வீட்டிற்குப் போனால் திரும்பி வரமாட்டோம் என்பதை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருந்த காரணத்தால் இந்த ஏற்பாடு நடந்திருந்தது. படிக்கத் தங்கினோமோ இல்லையோ நிச்சயம் சாப்பிடத்தான் தங்கினோம். அதிலும் என்னைப்பற்றி சொல்லவே வேண்டாம். பள்ளிக்கு வராதவர் உணவையும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் நான் சாப்பிட்டு விடுவேன்.

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிந்ததும் மிகவும் வருத்தப்பட்டவன் நான்தான். மாலை வகுப்பு நிறுத்தப்பட்டதால் மதிய உணவு கட்டாகிப் போனது. காலையுணவு மட்டும்தான். யாராவது பள்ளிக்கு வரக்கூடாது என்றெல்லாம் வேண்டிக் கொள்வேன். இப்படியாக ஜாலியாகப் போன என் பள்ளி வாழ்க்கை இடைநிலைப்பள்ளியில் பெருமளவில் பாதிக்கப்பட்டது. காலையுணவுக்கும் மாலையுணவுக்கும் திண்டாடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அம்மாவிடம் காசு இருந்தால் கொடுப்பார், இல்லையேல் அதோகதிதான். சில நாள்கள் அம்மா காலையுணவைத் தயாரித்துத் தருவார். மாதயிறுதி ஆனதால் என் பாடு திண்டாட்டம் ஆனது. அம்மா கையில் காசும் இல்லை; உணவு தயாரித்துக் கொடுக்கவும் முடியவில்லை.

பள்ளிக்குப் புறப்பட்டு வந்துவிட்டேன். காலையிலிருந்தே வயிறு பசியால் துடிதுடித்தது. சிவாவிடமும் சங்கரியிடமும் வெட்கத்தைவிட்டுக் கேட்டும் பார்த்துவிட்டேன். இருவருமே அன்று ஒன்றும் கொண்டுவரவில்லை. கையிலும் காசில்லை என்று கையை விரித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் பசி மயக்கத்தில் இருந்தேன். அன்று ஓய்வு வேளைக்கு முன் தமிழ்ப்பாடம். ஆசிரியரிடம் கேட்டுவிடலாமென்று எண்ணியிருந்த எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. தமிழாசிரியர் ஏதோ குர்சுஸ்க்குச் சென்றுவிட்டாராம். கந்திக்கு வேறோர் ஆசிரியர் வந்திருந்தார். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சீன மாணவர்கள் சீன வகுப்புக்குச் சென்றிருந்தனர். பசி என் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது. கந்தி ஆசிரியர் ஏதோவொரு வேலையாக அலுவலகம் சென்ற நேரம் சியு மெய்யின் மீ கோரேங் என் பசியை ஆற்றியது. சிவாவும் சங்கரியும் எவ்வளவோ சொல்லியும் பசி என் காதை அடைத்துவிட்டது. மீ கோரேங் வயிற்றை நிரப்பிவிட்டது.

ஓய்வு வேளைக்குத் தன் மீ கோரெங்கை எடுக்க வந்த சியு மெய், மீ கோரெங் காணாமல் போனதை அறிந்து அழத் தொடங்கிவிட்டாள். செய்தி வைரல் ஆனது. கட்டொழுங்கு ஆசிரியர் வகுப்பிற்கு வந்தார். யாரையும் ஓய்வுக்குச் செல்ல அனுமதிக்காமல் தன் விசாரணையைத் தொடங்கினார். அவர் கேட்ட மாத்திரத்திலே நான் உண்மையை ஒப்புக் கொண்டேன். கட்டொழுங்கு அறையில் நிற்கிறேன். காட்டுத்தீ போல செய்தி பரவிவிட்டது. அம்மா அழைக்கப்பட்டிருக்கிறார். அவரும் வந்து கொண்டிருக்கிறாராம்..

#சரவணன் இராமச்சந்திரன்

PT3 கேள்வி 11. பயிற்சி 2

1. கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

விளம்பரங்களின் மூலம் பயனீட்டாளர்கள் ஒரு பொருளைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பயனீட்டாளர்களுக்கு ஒரு பொருளை அல்லது சேவையைப் பற்றிய முழு விவரங்கள், பயன்பாடு, நன்மைகள் ஆகியவற்றை விளம்பரங்கள் தெளிவாக விளக்குகின்றன. ஆக, பயனீட்டாளர்கள் பொருள்களின் தரம், விலை, வணிக முத்திரைகளைப் பார்த்து அவர்களின் இரசனைக்கு ஏற்ப பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், விளம்பரங்களின் மூலம் சந்தையில் வெளியாகும் பல புதிய பொருள்களைப் பற்றி பயனீட்டாளர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.
அதிகமான பயனீட்டாளர்கள் விளம்பரத்திற்கு அடிமையாகி வீண் செலவு செய்கின்றனர். பயனீட்டாளர்கள் விளம்பரங்களின் மூலம் கவரப்பட்டு, மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்துப் பொருள்களை வாங்கி ஏமாறுகின்றனர். பெண்கள், அழகுச் சாதனப் பொருள்கள் உணவுப் பொருள்கள் போன்றவறை அறிமுகப்படுத்தும் விளம்பரங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு அப்பொருள்களை வாங்குகின்றனர். ஆனால், சில பொருள்கள் விளம்பரத்தில் பார்ப்பதற்கு மட்டும்தான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வாங்கிப் பயன்படுத்தினால் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல தரமிருக்காது. இதனால் பயனீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதோடு சில சமயங்களில் தரமற்ற பொருள்களினால் உடல் நலப் பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.
-மயில் – (எழுத்தாளப்பட்டது)

அ. ஒரு வியாபாரத்தின் உயிர் நாடியாக விளங்குவது என்ன?
____________________________________________________________________ ( 1 புள்ளி )

ஆ. விளம்பரங்களின் மூலம் பயனீட்டாளர்கள் அடையும் பயன்கள் யாவை?
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ ( 3 புள்ளிகள் )

இ. பயனீட்டாளர்கள் எவ்வாறு விளம்பரங்களினால் ஏமாற்றப்படுகின்றனர்.
____________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________ ( 2 புள்ளிகள் )
ஈ. முகநூல் வியாபாரங்களைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________( 4 புள்ளிகள் )

விடைப்பட்டி

அ) விளம்பரதின் உயிர் நாடி பயனீட்டாளர்களுக்கு ஒரு பொருளை அல்லது சேவையைப் பற்றிய முழு விவரங்கள், பயன்பாடு, நன்மைகள் ஆகியவற்ற தெளிவாக விளக்குவதாகும்.

ஆ) பயனீட்டாளர்கள் பொருள்களின் தரம், விலை, வணிக முத்திரைகளைப் பார்த்து அவர்களின் இரசனைக்கு ஏற்ப பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும், விளம்பரங்களின் மூலம் சந்தையில் வெளியாகும் பல புதிய பொருள்களைப் பற்றி பயனீட்டாளர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.

இ) சில பொருள்கள் விளம்பரத்தில் பார்ப்பதற்கு மட்டும்தான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வாங்கிப் பயன்படுத்தினால் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல தரமிருக்காது. இதனால் பயனீட்டாளர்கள் ஏமாற்றப்படுவதோடு சில சமயங்களில் தரமற்ற பொருள்களினால் உடல் நலப் பாதிப்புக்கும் ஆளாகின்றனர்.

ஈ) இன்றைய காலகட்டத்தில் முகநூல் வியாபாரம் என்பது அனைத்து சமுதாயத்தினரிடையே மிகவும் பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஓர் இடத்தில் அமர்ந்த படியே வியாபாரம் செய்து தனது வருவாயைப் பெருக்கிக்கொள்கின்றனர். இம்முறையானது பயனீட்டாளர்களுக்குப் பயனுள்ளது என்றாலும் சில பொருப்பற்ற வியாபாரிகளால் இவர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்டு பொருள்களை அனுப்பாமல் பயனீட்டாளர்களை ஏமாற்றி விடுகின்றனர். அதுமட்டுமன்றி பொருள்கள் விளம்பரத்தில் பார்ப்பதற்கு மட்டும்தான் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வாங்கிப் பயன்படுத்தினால் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல தரமிருக்காது. எனவே, பொருள்களை முகநூல் வழி வாங்குவதை விடுத்து, அப்பொருளின் பயன்பாட்டையும் நன்மையையும் நாமே கண்கூடாகப் பார்த்து வாங்குதல் சிறப்பு.

PT3 இலக்கணக் கூறுகள்

எழுத்தியல்
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிர்மெய் எழுத்து
குற்றெழுத்து
நெட்டெழுத்து
இன எழுத்து
சுட்டெழுத்து
அகச்சுட்டு – புறச்சுட்டு
வினா எழுத்து
அகவினா – புறவினா

சொல்லியல்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
ஆகுபெயர்
இடம்
திணை
பால்
எண்
வேற்றுமை
வினைமுற்று
எச்சம்
தன்வினை – பிறவினை
செய்வினை – செயப்பாட்டு வினை
குன்றியவினை – குன்றாவினை

வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்

தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்

நேர்க்கூற்று – அயற்கூற்று

புணரியல்
வலிமிகுதல்

நிறுத்தக்குறிகள்
சந்தம்
எதுகை
மோனை

திருக்குறள் (9)
பழமொழி (15)
செய்யுள் (6)
திருமுறை விறகில் தீயினன்
மூதுரை நெல்லுக்கிறைத்த
நாலடியார் பாலோடு அளாய
நாலாயிரத் திவ்யபிரபந்தம் வையம் தகளியா
அறநெறிச்சாரம் எப்பிறப்பாயினும்
திருவருட்பா இயற்கையுண்மை

இணைமொழி (15)
மரபுத்தொடர் (15)
உவமைத்தொடர் (15)
இரட்டைக்கிளவி (15)